`இந்த 3 ஊர்களிலும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கணும்' - ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்

விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூர், வர்த்தக நகரான பண்ருட்டி, கோயில் நகரமான சிதம்பரம் என மாவட்டத்தில் எந்த இடத்திலும் இந்த ரயில் நிற்காது என தெரிவிக்க பட்டுள்ளுது.

கடலூர் மாவட்டத்தில் தாம்பரம் - நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தக்கோரி கடலூரில் அனைத்துக் குடியிருப்போர் 
நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி முதல் தாம்பரம் இடையே முன் 
பதிவில்லா அந்தியோதயா ரயிலை மத்திய அமைச்சர் ராஜன் கோகைன் தொடங்கி வைத்தார்.   

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கக்கோரி ஆர்ப்பாட்டம்

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம்,தஞ்சாவூர், திருச்சி, மதுரை  வழியாக பகல் 3.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. இதேபோன்று மறுமுனையில் திருநெல்வேலியிலிருந்து மாலை 5.30 மணிக்கு  புறப்படும் அந்தியோதயா  ரயில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் 
சென்றடைகிறது. 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகளைக் கொண்டது.

இந்த ரயில் பாமர, நடுத்தர மக்களுக்கு  பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு  ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூர், வர்த்தக நகரான பண்ருட்டி, கோயில் நகரமான சிதம்பரம் என மாவட்டத்தில் எந்த இடத்திலும் இந்த ரயில் நிற்காது எனத் தெரிவிக்கபட்டுள்ளது. இதைக்கண்டித்து அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏரளாமானோர் கலந்து கொண்டு, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய இடங்களில் ரயில் நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!