வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (19/06/2018)

கடைசி தொடர்பு:17:40 (19/06/2018)

கிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை!

நாகர்கோவிலில் கிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவன்மீது வெந்நீர் கொட்டியதில் இடுப்புக்குக் கீழ்ப்பகுதி முழுவதும் காயம் ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

நாகர்கோவிலில் கிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவன்மீது வெந்நீர் கொட்டியதில் இடுப்புக்குக் கீழ்ப்பகுதி முழுவதும் காயம் ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

குழந்தை

நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த நாகராஜன் - பாமா தம்பதியின் மகன் துஷ்யந்த். நாகராஜனுக்கும் பாமாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்துவருவதால் இருவரும் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையைப் பாமா வளர்த்து வந்தார். நாகர்கோவிலில் ஒரு டெய்லரிங் நிறுவனத்தில் பாமா பணிபுரிந்து வருகிறார். வேலைக்குச் செல்வதால் குழந்தையை டெய்லரிங் சென்டர் அருகே உள்ள ஒரு கிட்ஸ் ஸ்கூலில் காலையில் விட்டுச் செல்வார், பின்பு மாலையில் குழந்தையை அழைத்துச் செல்வார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கிட்ஸ் ஸ்கூலில் குழந்தைகளுக்கு வெந்நீர் காய்ச்சியபோது எதிர்பாராத விதமாகக் கவிழ்ந்ததில் துஷ்யந்த் மீது வெந்நீர் கொட்டியிருக்கிறது. இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கிட்ஸ் ஸ்கூல்

குழந்தைக்கான மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்வதாக கிட்ஸ் ஸ்கூல் நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், இன்று காலை மருத்துவமனையில் பில் முடிக்கும்போது ஸ்கூல் நிர்வாகம் கைவிரித்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஸ்கூல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பாமா கூறுகையில், "கிட்ஸ் ஸ்கூல் நிர்வாகத்தின் கவனக்குறைவால் என் மகன்மீது வெந்நீர் கொட்டியுள்ளது. சிகிச்சைக்கான பணத்தைக் கொடுப்பதாக இரண்டு நாளுக்கு முன் வரை கூறினார்கள். ஆனால், இன்று பில் முடிக்கும்போது அவர்கள் வரவில்லை. இதுவரை ரூ.30,000 செலவாகியுள்ளது. எனவே கிட்ஸ் ஸ்கூல் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க