வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (19/06/2018)

கடைசி தொடர்பு:18:15 (19/06/2018)

`சென்னை செல்கிறீர்களா?' - நிர்மலாதேவி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நிர்மலாதேவியைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

நிர்மலாதேவியைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி.யினர் மனு செய்துள்ள நிலையில், அதற்குப் பதில் அளிக்குமாறு நிர்மலாதேவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

நிர்மலாதேவி


அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு தற்போது மதுரைச் சிறையில் இருந்துவரும் நிலையில் குரல் சோதனைக்காகச் சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சி.பி.சி.ஐ.டி-யினர், விருதுநகர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மனுத்தாக்கல் செய்தனர். அதில், ``நிர்மலாதேவியின் குரல் மாதிரியை முழுமையாகச் சோதனை செய்ய தேவையான வசதிகள் மதுரைச் சிறையில் இல்லை. சென்னையில்தான் அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே நிர்மலாதேவியை சென்னை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்'' என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இதற்கு நிர்மலாதேவி பதிலளிக்க உத்தரவிட்டு, அந்த வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையே ஜாமீன் வேண்டி ஐந்தாவது முறையாக நிர்மலாதேவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்த  ஜாமீன் மனுவும்  வாபஸ் பெறப்பட்டது. நிர்மலாதேவி விவகாரத்தில் கருப்புசாமிக்கு தொடர்பு உள்ளதற்கு போதிய ஆதாரம் உள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்ததால் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க