கொலம்பியாவை வீழ்த்தி வரலாறு படைத்த ஜப்பான்! | Japan defeat columbia in the world cup group stage

வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (19/06/2018)

கடைசி தொடர்பு:20:30 (19/06/2018)

கொலம்பியாவை வீழ்த்தி வரலாறு படைத்த ஜப்பான்!

ஜப்பான் கொலம்பியா இடையே குரூப் H-ன் முதல் மேட்ச் இன்று மோரோடிவா அரினாவில் நடைபெற்றது. இதில் கொலம்பியா அணியை
2 -1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்துள்ளது ஜப்பான்.

கொலம்பியா கோல்கீப்பர்

சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் 16-ம் இடத்தில் இருக்கும் கொலம்பியா அணியை 61 வது இடத்தில் இருக்கும் ஜப்பான் சுலபமாகத் தோற்கடித்துவிட்டது. ஆட்டத்தின் 3 வது நிமிடத்திலேயே கோல்போஸ்ட் அருகில் கொலம்பியாவின் சான்செஸ் மொரினோவின் கையில் பந்து பட்டதற்காக ரெட் கார்டு மற்றும் பெனால்ட்டி கொடுக்கப்பட்டது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் முதல் ரெட் கார்டு இது. அடுத்த இரண்டு நிமிடத்தில் பெனால்ட்டி வாய்ப்பை ஜப்பானின் ஷின்ஜி ககாவா கோல் ஆக்கினார். 10 பேர் கொண்ட அணியுடன் விளையாடியதால் அட்டாக் செய்ய முடியாமல் தவித்து வந்தது கொலம்பியா அணி. 

ஜப்பான் அட்டாக்

39 வது நிமிடம் கொலம்பியாவுக்கு ஃப்ரீகிக் வாய்ப்புக் கிடைக்க, டிஃபன்ட் சுவரின் கீழே பந்தைத் தட்டி கோலாக்கினார் ஃபெர்னாடோ குவின்டேரோ. பிறகு, முதல் பாதி முடியும் வரை அட்டாக் வாய்ப்பே இல்லை. நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ராட்ரிக்யூஸ் இரண்டாம் பாதியில்தான் ஆட்டத்தில் களமிறங்கினார். ஆனால், அவராலும் கோல் எதையும் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து ஜப்பானின் அட்டாக் டிஃபன்டர்களைத் திணறடிக்க, கார்னர் கிக்கில் வந்த பந்தை ஹெட்டர் செய்து கோல் அடித்தார்  ஜப்பா ஸ்டிரைக்கர் ஒஸாகா.

ஜப்பானின் கொடூர டிஃபன்ஸ்

கடைசிவரை கொலம்பியாவால் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. கடந்த உலகக் கோப்பையில் கொலம்பியா, ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பைத் தொடங்கியது முதல் அதிக எதிர்பார்ப்புகள் கொண்ட டீம் தோற்றுப்போகிறது அல்லது டிரா ஆகிறது. இதனால் இந்த உலகக் கோப்பையின் டார்க் ஹார்ஸ் யார் என்பதே இன்னும் தெரியவில்லை. ஆசியாவைச் சேர்ந்த கால்பந்து அணி, உலகக் கோப்பைத் தொடரில் தென் அமெரிக்க அணியை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.