சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்று! - ராமேஸ்வரத்தில் ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

 ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுழன்று அடிக்கும் சூறாவளி காற்றினால் ராமேஸ்வரத்திலிருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் கடந்த இரு நாட்களாக தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

 ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுழன்று அடிக்கும் சூறாவளி காற்றினால் ராமேஸ்வரத்திலிருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் கடந்த இரு நாள்களாக தாமதமாகப் புறப்பட்டுச் செல்கின்றன.

 

சூறாவளி காற்றினால் ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

தென்மேற்கு பருவமழை தேனி,திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான ராமேஸ்வரம் பகுதியில் கடந்த இரு நாள்களாக சூறாவளிக் காற்று சுழன்று அடித்து வருகிறது. மணிக்கு 55 கி.மீ வேகத்திற்கு மேலாக காற்று வீசி வருகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக உள்ளது. இதையடுத்து தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாலை நேரங்களில் ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் ரயில்கள் காற்றின் வேகத்தினால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து செல்ல வேண்டிய மதுரை பயணிகள் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து மாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட திருப்பதி மற்றும் சென்னை விரைவு ரயில்கள் பாம்பன் பாலத்தில் செல்ல சிக்னல் கிடைக்காததால் பாம்பன் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்பட்டு 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இன்றும் காற்றின் வேகம் குறையாததால் மதுரையில் இருந்து வந்த பயணிகள் ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து மதுரைக்கு சென்றது. இதேபோல் மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை விரைவு ரயில் இரவு 7 மணி வரை புறப்படாத நிலையில் ராமேஸ்வரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!