வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (20/06/2018)

கடைசி தொடர்பு:00:30 (20/06/2018)

அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவால் யானைக்கு நேர்ந்த சோகம்!

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயில் யானை மங்களத்தை வெளியே எங்கும் அழைத்து செல்லாமல்,பக்தர்களுக்கு ஆசியும் வழங்காமல் ஒரே இடத்தில் கட்டி போட்டிருந்ததால் மங்களத்தின் கால்கள் வீங்கி அவதிபட்டு வருகிறது. வெளியே எங்கும் அழைத்து செல்லகூடாது என அறநிலையத்துறையின் அதிகாரிகள் கூறியதனாலேயே யானைக்கு இந்த நிலைமை என பக்தர்கள் புகார் வாசிக்கிறார்கள்

கும்பகோணத்தில் அறநிலையத்துறை அதிகாரிகளின் உத்தரவால் கோயில் யானை கடந்த ஒரு வாரமாக ஒரே இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. 

யானை

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயில் யானை மங்களத்தை வெளியே எங்கும் அழைத்து செல்லாமல்,பக்தர்களுக்கு ஆசியும் வழங்காமல் ஒரே  இடத்தில் கட்டி போட்டிருந்ததால் மங்களத்தின் கால்கள் வீங்கி அவதிபட்டு வருகிறது. வெளியே எங்கும் அழைத்து செல்லகூடாது  என அறநிலையத்துறையின் அதிகாரிகள் கூறியதனாலேயே யானைக்கு இந்த நிலைமை என பக்தர்கள் புகார் வாசிக்கிறார்கள்.

கும்பகோணத்தில் உள்ள  ஆதிகும்பேஸ்வரன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த கோயிலில் மங்களம் என்ற யானை உள்ளது. 1989ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவர்  மங்களம் யானையை இந்த கோயிலுக்காக வழங்கினார். தற்போது யானை மங்களத்துக்கு 50 வயதாகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மங்களத்திடம் ஆசி வாங்கி கொண்டுதான் செல்வார்கள்.அந்த அளவிற்கு பக்தர்களுடன் கலந்திருந்தது யானை மங்களம்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அதன் தாழ்வாரத்திலேயே யானை மங்களம் கட்டியே கிடந்தது.யானையை வெளியே எங்கும் அழைத்து செல்லவில்லை. கொஞ்சம் கூட நடக்க விடாததால் யானையின்  கால்கள் வீங்கியது. இதனால் பல வகையில் அவதிப்பட்டு வருகிறது மங்களம். மேலும் யானை கட்டியே  கிடந்தால் மனரீதியாக பாதிக்கப்பட்டு மதம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே சளி பிரச்னையால் மங்களம் யானை அவதிப்பட்டு வந்தது. இப்போது கால்கள் வீங்கியதோடு ஒரே இடத்தில் இருந்ததால் புத்துணர்ச்சி இல்லாமலும் காணப்படுகிறது. எனவே அறநிலையத்துறை நிர்வாகம் உடனடியாக கும்பேஸ்வரன் கோயில் யானை மங்களத்தை வெளியில் நடக்க விடுவதோடு பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் தினம்தோறும் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய பக்தர்கள், ``யானைகள் ஒரே இடத்தில் இருந்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதற்காகவே அரசு ,ஒவ்வொரு வருடமும் முதுமலை முகாமுக்கு புத்துணர்ச்சிக்கு அனுப்பி வைக்கிறது.ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் யானைகள் விஷயத்தில் அக்கறை காட்டுவதே இல்லை.மேலும்  கடந்த இருபது நாள்களுக்கு முன்பு சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்து பாகனையே மிதித்து கொன்றது. இந்த சம்பவத்தை காரணம் காட்டியே யானைகள் விஷயத்தில் அக்கறை காட்டாமல் ஒரே இடத்தில் கட்டி வைக்க சொல்லி பாகன்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதுபோன்ற செயல்களால் யானை மேலும் பாதிக்கப்படும்’’ என்றனர்.

இதுகுறித்து கோயில் ஊழியர் கூறுகையில், ``மங்களம் யானை தினம்தோறும் வாக்கிங் சென்று விட்டு காலையிலேயே கோவில் வளாகத்தில் வந்து நின்று விடும். பின்னர்  மதியமும் வெளியே  சென்று விட்டு மாலையில் வந்து நின்று பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும். இந்நிலையில் திடீரென கோயில் நிர்வாகத்தினர்  யானையை வெளியில் அழைத்து செல்ல வேண்டாம் என்றதோடு, ஆசி வழங்கவும் நிறுத்த வேண்டாம் என பாகனிடம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததையடுத்து எங்களிடம் சொன்னார்கள். அதனாலேயே ஒரே இடத்தில் கட்டியிருந்தது. இதனால் மங்களத்திற்கு கால்கள் வீங்கி தற்போது அதற்கு மருந்து போட்டு வருகிறோம்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க