அரசின் திட்டத்தை எதிர்த்தாலே கைது செய்வதா? எஸ்.டி.பி.ஐ ஆதங்கம்

எஸ்.டி.பி.ஐ

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் முபாரக் நேற்று திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஏழு தமிழர்களின் விடுதலை குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. இது மத்திய அரசின் முடிவு என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.  தமிழக சிறைச்சாலைகளில் இருந்த சிறைவாசிகள் 68 பேரை தமிழக அரசு விடுதலை செய்ததை வரவேற்கிறோம். அதேபோல், 10 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்களைப் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும்.

8 வழிச் சாலை தொடர்பாக தங்கள் நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் பறிக்கொடுக்கப் போகும் சேலம் மக்களின் கருத்துகளைக்கூட அரசு கேட்க மறுக்கிறது. அரசின் திட்டத்தை எதிர்த்தாலே கைது என்கிற நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். சேலம் மக்கள் அனுமதித்தால் மட்டும்தான் பசுமைச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். ஆனால், அது புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு மாநில உறவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் அரசின் பங்கு மிக குறைவு. இதில் வெற்றி பெற்றது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!