தமிழக முதல்வர் முதல் ரஜினி வரை... அடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச் இவர்களுக்குத்தான்! | Isha yoga center's Jakki Vasudev Fitness challenge to Tamilnadu Chief Minister

வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (20/06/2018)

கடைசி தொடர்பு:15:35 (20/06/2018)

தமிழக முதல்வர் முதல் ரஜினி வரை... அடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச் இவர்களுக்குத்தான்!

தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு, ஜக்கி வாசுதேவ் ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்துள்ளார்.

ஜக்கி வாசுதேவ்

ஃபிட்னஸ் சேலஞ்ச் தான் தற்போதைய வைரல் ட்ரெண்டிங். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ஜிம் வொர்க் அவுட் குறித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, பிரதமர் மோடிக்கு ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட மோடி, கடந்த வாரம் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை வீடியோ எடுத்து, ட்விட்டரில் ரிலீஸ் செய்தார். தற்போது வரை நெட்டிசன்கள், அந்த ஃபிட்னஸ் வீடியோவை வைத்து, மீம்ஸ் மழை பொழிந்துவருகின்றனர். இதனிடையே, கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு, பிரதமர் மோடி ஃபிட்னஸ் சேலஞ்சர் விட்டிருந்தார். ஆனால், 'எனக்கு ஃபிட்னஸ் சேலஞ்சைவிட, கர்நாடகாவின் வளர்ச்சி ஃபிட்னஸ்தான்  முக்கியம்' என்று குமாரசாமி பதில் அளித்திருந்தார். இந்நிலையில், ஈஷா யோக மையத்தின் ஜக்கி வாசுதேவ், யோகா செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு ஃபிட்னஸ் சேலஞ்ச் செய்துள்ளார்.