வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (20/06/2018)

கடைசி தொடர்பு:15:46 (20/06/2018)

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா!

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அருண் ஜெட்லி தனது ஃபேஸ்புக் பதிவில், " கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரவிந்த் சுப்ரமணியன், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் என்னிடம் பேசினார். அப்போது சில குடும்ப கடமைகள் காரணமாக தாம் அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதனால், தமது பதவியை ராஜினாமா செய்வதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

அரவிந்த் சுப்ரமணியன்

பதவி விலகலுக்கு அவரது தனிப்பட்ட விஷயம் காரணமாக இருந்தாலும், அது அவருக்கு மிகவும் முக்கியமானது. அவரது ராஜினாமாவை ஏற்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை" எனத் தெரிவித்துள்ளார். 

சுப்ரமணியன் கடந்த 2014 அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். அவரது பதவி காலம் வரும் கடந்த 2017, அக்டோபர் 16ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அவரின் பதவி காலத்தை 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே சுப்ரமணியன் தனது பதவியிலிருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் சுப்ரமணியன் டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் அகமதாபாத் ஐஐஎம்-ல் எம்பிஏ முடித்த அவர், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பில் மற்றும் டி.பில் பட்டங்களை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க