எம்.பி தேர்தலுக்கு வந்திறங்கிய புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்! | New electoral voting tools for karur elections

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (20/06/2018)

கடைசி தொடர்பு:17:30 (20/06/2018)

எம்.பி தேர்தலுக்கு வந்திறங்கிய புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்!

"வரும் 2019-ம் ஆண்டு, கரூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்காகப் புதிய மின்னணு வாக்குப்பதிவுக் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் வந்துள்ளன" என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிடும் கலெக்டர்

கரூர் மக்களவைத் தொகுதிக்காக வரபெற்ற புதிய மின்னணு வாக்குப்பதிவுக் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பறையில் வைத்து மூடி, முத்திரை இடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன்  பார்வையிட்டார்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக பெங்களூரு பெல் நிறுவனத்தில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட 2,560 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 1370 கட்டுப்பாட்டுக் கருவிகள், மூன்று வாகனங்களில் கரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடுசெய்து வரப்பெற்றுள்ளன. அவை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பறையில் வைத்து மூடி முத்தரையிடப்பட்டு, காவல்துறையின் தொடர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், இந்த எந்திரங்கள் எடுக்கப்பட்டு, கரூர் முழுக்க வாக்குப்பதிவு செய்யப் பயன்படுத்தப்படும். அதுவரை, இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும். தகுந்த பாதுகாவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என்றார்.