வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (20/06/2018)

கடைசி தொடர்பு:17:22 (20/06/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விமர்சனம்செய்த சீரியல் நடிகை கைது!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விமர்சித்து காவலர் உடையில் விடியோ வெளியிட்டு பேசிய நடிகை நிலானியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விமர்சித்து, காவலர் உடையில் விடியோ வெளியிட்டுப் பேசிய நடிகை நிலானியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

நடிகை கைது


ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 100-வது நாள் நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கச் சூடு நடத்தினர். அதில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக, டி.வி நடிகை நிலானி, காவலர் சீருடையில்  வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், 'காவலர் சீருடை அணிவதற்குக் கேவலமாக உள்ளது; அநியாயமாக பொதுமக்களைச் சாகடித்துள்ளனர்' என தூத்துக்குடி சம்பவத்தை விமர்சித்திருந்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, அவர்மீது காவலர் உடை அணிந்து மோசடி செய்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை நிலானி மீது, கடந்த 24-ம் தேதி வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர், எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், நடிகை நிலானியை வடபழனி காவல்துறையினர் குன்னூரில் கைதுசெய்துள்ளனர்.