ரூ.2 கோடியில் ஊட்டி பேருந்து நிலையம் மறு சீரமைக்கப்படுகிறது!

உரிய பராமரிப்பு இல்லாமல், பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் ஊட்டி அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலைய மறு சீரமைப்புக்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் தெரிவித்துள்ளார்.

உரிய பராமரிப்பு இல்லாமல், பல ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாக இருக்கும் ஊட்டி அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலைய மறுசீரமைப்புக்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் தெரிவித்துள்ளார். 

பேருந்துநிலையம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி பேருந்துநிலையத்துக்கு நாள்தாேறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக, ஊட்டி பேருந்து நிலையத்தில் போதிய கட்டமைப்பு வசதியும், இருக்கை வசதியும் இல்லாமல் பயணிகளை முகம் சுழிக்கவைக்கும்படி உள்ளது. குறிப்பாக, மழைக் காலத்தில் பேருந்து நிலையத்திற்குள் கால் வைக்க முடியாத அளவு தேங்கி நிற்கும் மழை நீரில் கப்பல் விட்டு, சமூக வலைதளங்களில் அரசாங்கத்தையும், அரசு அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்துப் பதிவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊட்டி அரசுப் பேருந்துநிலையம் சீரமைப்புக்காக, அரசு சார்பில் ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், ஊட்டி பேருந்து நிலையம் புதுப் பாெலிவுபெற உள்ளது.

இதுகுறித்து ஊட்டி அரசு போக்குவரத்துக் கழகத் துணை மேலாளர் கணேசன் கூறுகையில், ‛‛ஊட்டி அரசு பாேக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம் மறு சீரமைப்புக்காக அரசு சார்பில் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, 5 நாள்கள் ஆகியுள்ளன. டெண்டர் எடுக்க மொத்தம் 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அநேகமாக, வரும் ஜூலை 10-ம் தேதி முதல் பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கிறோம். ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவுகொண்ட ஊட்டி பேருந்து நிலையத்தில், பேருந்துகள் இயக்கப்படும் பகுதியில், பல முறை தார் ரோடு அமைக்கப்பட்டும், அது தாக்குப்பிடிக்கவில்லை. எனவே, இந்த முறை இன்டர் லாக் கற்களைக் கொண்டு சீரமைக்கப்பட உள்ளது. மேலும், உள்கட்டமைப்பு வசதியும் மேம்படுத்தப்படும்’’என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!