`பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..!' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி | mahendra singh dhoni wife applied for gun licence

வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (20/06/2018)

கடைசி தொடர்பு:20:22 (20/06/2018)

`பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..!' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி

'துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும்' என ராஞ்சி மாஜிஸ்திரேட்டிடம் விண்ணப்பித்திருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி. 

தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது பள்ளிப்பருவ தோழியான சாக்ஷியைக் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, ஜிவா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தோனியின் மனைவி சாக்‌ஷி, துப்பாக்கி உரிமம் கோரி மாஜிஸ்திரேட்டிடம் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், `நான் பெரும்பாலான நேரம் வீட்டில் தனியாக இருக்கிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே செல்லும் சூழலும் உள்ளது. இப்படியான சூழ்நிலையில் என்னுடைய பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த 2008-ம் ஆண்டு, 9 எம்.எம் பிஸ்டல் வைத்துக்கொள்ள உரிமம் கோரி ராஞ்சி மாஜிஸ்திரேட்டிடம் விண்ணப்பித்தார் தோனி. ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு, 2010-ம் ஆண்டு மீண்டும் விண்ணப்பித்து அனுமதியைப் பெற்றார். இந்தநிலையில், 'சாக்‌ஷிக்கும் துப்பாக்கி உரிமம்  வழங்கப்பட்டால், 0.32 எம்.எம் ரக துப்பாக்கியை வைத்துக்கொள்ள அனுமதி பெறுவார்' எனத் தகவல் வெளியாகியுள்ளது.