வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (20/06/2018)

கடைசி தொடர்பு:23:44 (20/06/2018)

பாரத் 22 இ.டி.எஃப்... முதலீடு செய்யலாமா?

பொதுத்துறை நிறுவனமான பாரத் 22 இ.டி.ஃஎப் ( Bharat 22 Etf) பொதுமக்களுக்கு பங்குகளை இரண்டாவது முறையாக நேற்று (19-ம் தேதி) வெளியிட்டுள்ளது. இந்தப் பங்கு வெளியீடு, வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது.

பொதுத்துறை நிறுவனமான பாரத் 22 இ.டி.ஃஎப் ( Bharat 22 Etf) பொதுமக்களுக்கு பங்குகளை இரண்டாவது முறையாக நேற்று (19-ம் தேதி) வெளியிட்டுள்ளது. இந்தப் பங்கு வெளியீடு, வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது.

முதலீடு

இந்தப் பங்கு வெளியீட்டின்மூலம் ரூ.6,000 கோடி திரட்ட முடிவுசெய்துள்ளது. இரண்டாவது நாளாக இன்று, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு நடந்தது. இதில், இந்த நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 3.4 மடங்கு விண்ணப்பங்கள் அதாவது, ரூ.5,163 கோடிக்கு வந்துள்ளன. இதில், வெளிநாட்டுப் பங்கு முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஓய்வூதியத் திட்ட ஃபண்டுகள் ஆகியவை பங்கேற்றன. 

நாளை முதல் வரும் 22-ம் தேதி வரை சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் இதர தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. இந்த ஃபண்டில் முதலீடு செய்ய,  சிறு முதலீட்டாளர்களுக்கு 2.5% சலுகை விலை தரப்படுவது முக்கியமான விஷயமாகும்.

இந்தப் ஃபண்டில் முதலீடு செய்யலாமா என்பதுகுறித்து பலரும் பலவிதங்களில் கருத்துச் சொல்லிவருகின்றனர்.  ''இது ஒரு கவர்ச்சிகரமான முதலீடுதான். இதன்மூலம் ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்'' என்று சொல்லியிருக்கிறார், வேல்யூ ரிசர்ச் ஆன்லைன் பத்திரிகையின் ஆசிரியர் திரேந்திர குமார்.

இந்த இ.டி.எஃப் ஃபண்டில் முதலீடுசெய்ய நினைப்பவர்கள், இந்த ஃபண்டைப் பற்றி பரிசீலிக்கலாமே!