ஏப்ரலில் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகள் 22% உயர்வு!

மத்திய அரசு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து, வலியுறுத்திவரும்நிலையில், ஏப்ரல் மாதம் ஏடிஎம் மையங்களில் பணப் பரிவர்த்தனைகள்  22 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

மத்திய அரசு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்குத்  தொடர்ந்து  முக்கியத்துவம்  அளித்து,  வலியுறுத்திவரும் சமயத்தில், ஏப்ரல் மாதத்தில் ஏடிஎம் மையங்களில் பணப் பரிவர்த்தனைகள் 22 சதவிகிதம் அதிகரித்துள்ளன. 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், மத்திய அரசு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கந்த் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தது  22 சதவிகிதம் அதிகரித்துள்ளது என தற்போது தெரியவந்துள்ளது.  ஏப்ரலில் 66 வங்கிகளின் பல்வேறு ஏடிஎம் மையங்களில் ரூ. 2.65 லட்சம் கோடி எடுக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு, ரூ. 2.2 லட்சம் கோடி என்ற அளவில்தான் ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரலில், ஏடிஎம் மையங்களில் இருந்து  ரூ.2.16 லட்சம்  கோடி தான்  எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏடிஎம் மையங்களில் 76 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம், ஏப்ரலில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றின் பயன்பாடும் உயர்ந்துள்ளது. ஏப்ரலில்
டெபிட் கார்டு மூலம் ரூ.45,500 கோடிக்கு, 33 கோடி  பரிவர்த்தனைகள்  நடந்துள்ளன. கடந்த ஆண்டு டெபிட் கார்டு  ரூ.38,000 கோடிக்கு 27 பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்திருந்தது. கிரெடிட் கார்டு மூலமாக, ரூ.44, 834  கோடிக்கு 13 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.  இது, கடந்த ஆண்டின்  இதே மாதத்தில்  ரூ.33,142 கோடிக்கு 10 கோடி பரிவர்த்தனைகள் என்ற அளவில்தான் இருந்தது. 

பொதுமக்களின் கையில் தற்போது ரூ.18.5 லட்சம் கோடி பணம் உள்ளது.  இது, பண மதிப்பு  நீக்க நடவடிக்கைக்குப்  பிந்தைய மாதங்களில் ரூ.7.8 லட்சம்  கோடியாகத்தான் இருந்தது.  ஏப்ரலில், பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் 7 சதவிகிதம் உயர்ந்து, 18.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் ரூ.17 லட்சம் கோடியாகத்தான் இருந்தது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!