`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி! | kamal meet rahulgandhi at his resident

வெளியிடப்பட்ட நேரம்: 22:11 (20/06/2018)

கடைசி தொடர்பு:22:11 (20/06/2018)

`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

கமல் ராகுல்


மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், தன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பாக யாராவது கருத்து, ஆட்சேபம் தெரிவிப்பதாக இருந்தால் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. யாரும் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில், தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற கமல்ஹாசன், தேர்தல் ஆணையம் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். இதையடுத்து, தனது கட்சிக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புகுறித்து கமல் தெரிவிக்கும்போது கூட்டணிகுறித்து எதுவும் பேசவில்லை என்றார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசியல் நிலவரம்குறித்து பேசியதாகப் பதிவிட்டுள்ளார். சமீபத்தில், பெங்களூரில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்த கர்நாடக முதல்வர் குமாரசாமியை கமல் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.