வெளியிடப்பட்ட நேரம்: 04:20 (21/06/2018)

கடைசி தொடர்பு:04:20 (21/06/2018)

11 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா..! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்க்கர் பெருமிதம்

 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், சின்னதாராபுரத்தில் 119 பயனாளிகளுக்கு ரூ.14.28 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலுள்ள வீரக்குமார் திருமண மண்டபத்தில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று 119 பயனாளிகளுக்கு ரூ.14.28 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, 'அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டுமென அரும்பாடுபட்ட அம்மா அவர்கள் அரசின் உதவிகளைப் பெறாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கினார். மேலும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை என்ற அடிப்படையில் மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்குவதுடன், விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது. பல தலைமுறைகளாக பட்டா இல்லாமல் சிரமப்பட்டுவந்த செல்வநகார், திருமாநிலையூர், ஒத்தக்கடை, கோதூர் போன்ற பகுதிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. சின்னதாராபுரம், கூடலூர், எம்.ஜி.ஆர். நகர், பிட்-2 பகுதியில் நில அளவைத்துறை, வருவாய்த்துறை, அலுவலர்களைக் கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் தனிபட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட 119 பட்டாக்களின் மதிப்பு ரூ.14.28 கோடி ஆகும். கடந்த ஆண்டு 11 ஆயிரம் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க அரசு நிர்ணயம் செய்திருந்தது. இலக்கை விட அதிகமாக 11 ஆயிரத்து விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாய் நகர்புறப் பகுதியல் 6 சதவீதம் வட்டியில் ரூ.6 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டி பயன்பெறலாம். ரூ.2 லட்சத்து பத்தாயிரம் மதிப்பில் கிராமப்புற பகுதியில் பசுமை வீடுகள் கட்டிகொடுக்கப்படுகின்றன. பெண்களின் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை உயரும் என்பதை கருத்தில் கொண்டு திருமண நிதியுதவி, அரை பவுன் தாலிக்கு தங்கம் வழங்கியதை உயர்த்தி, 1 பவுன் வழங்கும் திட்டம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் ஸ்கூட்டர் திட்டம். கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால நிதியுதவி, அரசு பணிபுரியும் பெண்களுக்கு 9 மாத பேறுகாலவிடுப்பு என பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன" என்றார்.