வெளியிடப்பட்ட நேரம்: 05:20 (21/06/2018)

கடைசி தொடர்பு:05:20 (21/06/2018)

`ஏழை மக்களுக்கு எய்ம்ஸ் ஒரு வரப்பிரசாதம்' - சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

அதிநவீன வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிநவீன வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ்

மதுரைக்கு அருகில் உள்ள தோப்பூர் என்ற இடத்தில் 200 ஏக்கரில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனை எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் 100 இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான இடங்களும், 60 செவிலியர்கள் படிக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 1,500 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ள `எய்ம்ஸ்' மருத்துவமனை குறித்த கூடுதல் தகவல்களைப் பெற சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம்.

நம்மிடம் பேசிய அவர், `தேசிய அளவிலான நிறுவனங்கள் ஐ.ஐ.டி, எய்ம்ஸ் போன்றவை தமிழகத்தில் அமைவது பெருமைக்குரிய விஷயம். எய்ம்ஸை பொருத்துவரை குறைந்த பட்சம் 750 படுக்கை வசதிகள் உடைய உயர்தர மருத்துவச் சிகிச்சைக் கொண்ட மருத்துவமனையாக இருக்கும். த

மிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன. இருப்பினும் எய்ம்ஸ் போன்ற மருத்துமனைகள் மூலம் நான்காம் கட்ட சிகிச்சைகள் அளிக்கப்படும். குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக திட்ட அறிக்கையை மத்திய அரசு தயாரிக்கும். தொடர்ந்து இதற்கான நிதிஒதுக்கீடு ஒப்புதல் அமைச்சரவையில் பெறப்படும். ஏறக்குறைய 2 வருடத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மதுரைக்கு அருகிலிருப்பதால் பொதுமக்கள் சென்று வருவதற்கு எளிதாக இருக்கும்.

கேரளா போன்ற அண்டை மாநிலத்தில் உள்ள நோயாளிகளும் எளிதில் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் அமையும். அதி நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எளிதில் அணுகக்கூடியதாகவும்; அவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். மேலும் ஒவ்வொரு நோயாளிக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர் மீது தனி கவனம் செலுத்தப்படும். ஏற்கனவே தமிழகம் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிவரும் நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் வருகை தமிழகத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும்' என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.