ரயிலில் மோதி காயமடைந்த மயில்..! சேதமான கண்ணாடி | A Peacock died collation with Train

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (21/06/2018)

கடைசி தொடர்பு:09:30 (21/06/2018)

ரயிலில் மோதி காயமடைந்த மயில்..! சேதமான கண்ணாடி

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் டிரைவர் இறங்கி பார்த்துள்ளார். அப்பொழுது ரயிலில் இன்ஜின் முன் பக்க கண்ணாடி உடைந்துள்ளது கண்டார், மேலும் ரயில் இன்ஜினின் மேல் பகுதியில் மயில் ஒன்று அடிப்பட்டு படுத்து கிடப்பதையும் கண்டுள்ளார். மயில் ரயில் வரும் போது பறந்து வந்து முன் பக்க கண்ணாடியில் மோதியதில் கண்ணாடி உடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது

குருவாயூரில் இருந்து சென்னை வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக தினமும் சென்று வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த ரயில் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் இரவு 7 மணிக்கு விருத்தாசலம் ரயில் நிலையம் வந்துள்ளது.

விருத்தாசலம்

விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு சற்று முன்பு இன்ஜின் முன்புறம் உள்ள கண்ணாடி மீது ஏதோ மோதியது போல் சத்தம் கேட்டதால் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் டிரைவர் இறங்கி பார்த்துள்ளார். அப்பொழுது ரயிலில் இன்ஜின் முன் பக்க கண்ணாடி உடைந்திருந்தது தெரியவந்தது. மேலும் ரயில் இன்ஜினின் மேல் பகுதியில் மயில் ஒன்று அடிப்பட்டு படுத்துக் கிடப்பதையும் கண்டுள்ளார்.

ரயில் வரும்போது மயில் பறந்து வந்து முன் பக்க கண்ணாடியில் மோதியதில் கண்ணாடி உடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. உடன் இதுகுறித்து விருத்தாசலம் ரயில் நிலைய ஊழியர்களிடம் டிரைவர் தெரிவித்தார். அங்கு வந்த ரயில் நிலைய ஊழியர்கள் இன்ஜின் மீது அடிப்பட்டிருந்த மயிலை மீட்டு விருத்தாசலம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் ரயில் நிலைய ஊழியர்கள் விரிசல் அடைந்த கண்ணாடியை சரி செய்தபின்னர், 7.20 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில் இன்ஜின் முன்புறம் உள்ள கண்ணாடியில் மயில் மோதியதில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 20 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டு சென்னை சென்றது.