``மோடி திருமணமாகாதவர்" - ஆனந்தி பென் பேச்சால் கொந்தளிக்கும் மோடியின் மனைவி

பிரதமர் மோடி திருமணம் செய்துகொள்ளவில்லை என்று ஆனந்திபென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

``மோடி திருமணமாகாதவர்

த்தியப் பிரதேச மாநில ஆளுநரான ஆனந்திபென் பட்டேல் அண்மையில் பேசியதாக குஜராத்தி நாளிதழ் 'திவ்யா பாஸ்கர்' செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. கர்தார் மாவட்டத்தில் திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி ஊழியர்களிடையே உரையாற்றிய ஆனந்திபென் பட்டேல், ``பிரதமர் மோடி திருமணமாகாதவர். ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்னைகளை நன்கு அறிந்தவர். பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு நலத் திட்டங்களை அவர் நிறைவேற்றியுள்ளார் '' என்று பேசியதாக அந்த செய்தியில் சொல்லப்பட்டருந்தது.  2014- ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது, வேட்பு மனுவில் மனைவி ஜசோதா பென் என்று பிரதமர்  குறிப்பிட்டிருந்தார். ஆனந்தி பென் பட்டேலின் பேச்சுக்கு மோடியின் மனைவி ஜசோதா பென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

ஜசோதா பென் அறிக்கை ஒன்றை வாசித்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், ``தேர்தல் மனுவில் என் பெயரை மனைவி என்று மோடி குறிப்பிட்டுள்ளார். அப்படியிருக்கையில் இந்திய பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ஆனந்திபென் பட்டேல் பேசியுள்ளார். நல்ல கல்வி அறிவு பெற்ற ஆனந்திபென் பட்டேல் போன்றவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட செயலை நான் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் மோடி என் மரியாதைக்குரியவர். என் கடவுள்'' என்று கூறியுள்ளார். 

ஜசோதா பென்னின் சகோதரர் அசோக் மோடி, ``சோசியல் மீடியாவில் ஆனந்தி பென்னின் பேச்சு பரவியது. அப்போது நாங்கள் நம்பவில்லை. ஜூன் 19-ம் தேதி 'திவ்யா பாஸ்கர்' பத்திரிகை முன்பக்கத்தில் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதையடுத்தே நானும் என் சகோதரியும் இந்த வீடியோவை வெளியிட்டோம் ''என தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!