மோடியைக் கிண்டலடித்த காங்கிரஸ்காரரின் வாழ்க்கையை மாற்றிய பக்கோடா! | PM Modi's pakoda selling advice changed life of Congress worker in Gujarat

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (21/06/2018)

கடைசி தொடர்பு:11:58 (21/06/2018)

மோடியைக் கிண்டலடித்த காங்கிரஸ்காரரின் வாழ்க்கையை மாற்றிய பக்கோடா!

மோடியை கிண்டல் செய்த காங்கிரஸ்காரருக்கு வாழ்வளித்த பக்கோடா

மோடியைக் கிண்டலடித்த காங்கிரஸ்காரரின் வாழ்க்கையை மாற்றிய பக்கோடா!

பிரதமர் மோடி, சில மாதங்களுக்கு முன், பக்கோடா விற்று கூட நாள் ஒன்றுக்கு ரூ.200 வரை சம்பாதிக்கலாம் என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். நாடு முழுவதும் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. பட்டதாரிகளை அவமதித்துவிட்டதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் நாட்டின் பல நகரங்களில் நடுரோட்டில் பக்கோடா போட்டு மக்களுக்கு இலவசமாக அளித்தனர். இப்படித்தான் குஜராத் மாநிலம் வதோராவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர் நாராயண் ராஜ்புத்தும்  மோடியைக் கேலி செய்யும் விதத்தில் பக்கோடா போட்டு விற்பனை செய்தார். 

மோடியை கிண்டலடித்த காங்கிரஸ் கட்சிக்காரரின்  கடை

போராட்டத்துக்காக போடப்பட்ட பக்கோடா  தனது வாழ்க்கையே மாற்றும் என்று நாராயண்ராஜ்புத் நினைக்கவில்லை. முதல் நாள் விற்பனையில் மோடி குறிப்பிட்டதுபோல 200 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. 'ஆஹா... நல்ல தொழிலாக இருக்கிறதே' என்று ராஜ்புத் ஆச்சர்யப்பட்டார்.  தொடர்ந்து பக்கோடா விற்பனை செய்யும் தொழிலை செய்துவந்தார். விற்பனை அமோகமாக தற்போது நாள் ஒன்றுக்கு 600 கிலோ பக்கோடா வரை அவர் விற்பனை செய்கிறார். அதோடு 35 கடைகளுக்கும் சப்ளையும் செய்கிறார். 

``மோடியை கிண்டல் செய்யும் விதமாகதான் பட்டம் பெற்றும் வேலை இல்லாமல் இருந்த நான், பக்கோடா கடையை ஆரம்பித்தேன். ஆச்சர்யப்படும்விதமாக லாபம் கிடைத்தது. தொடர்ந்து  விற்பனை செய்ய ஆரம்பித்தேன். தினமும் 600 கிலோ வரை  பக்கோடா தயாரிக்கிறேன். மோடியின் அறிவுரையை சீரியஸாக எடுத்துக்கொண்டேன். அதற்காக பாரதிய ஜனதா கட்சியில் எல்லாம் சேர மாட்டேன். கடைசி வரை காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன். அடுத்த பிறவியிலும் காங்கிரஸ்காரராகவே இருப்பேன். 100 கிராம் பக்கோடாவை 10 ரூபாய்க்கு விற்கிறேன் '' என்று கூறும் ராஜ்புத் நாராயணின் கடையின் பெயர் ஸ்ரீராம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க