போர் நிறுத்தம் முடிந்த அடுத்தநாளில் தலிபான்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்! உயிரிழந்த 30 ராணுவ வீரர்கள் | Taliban have killed about 30 Afghan soldiers

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (21/06/2018)

கடைசி தொடர்பு:11:45 (21/06/2018)

போர் நிறுத்தம் முடிந்த அடுத்தநாளில் தலிபான்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்! உயிரிழந்த 30 ராணுவ வீரர்கள்

போர் நிறுத்தத்துக்குப் பிறகு தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் பாத்கஷ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று திடீரென தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ராணுவத்தினர் நடத்திய எதிர்த் தாக்குதலில் 16 தலிபான்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படையினருக்கும் தலிபான்களும் இடையே சில காலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ரம்ஜான் பண்டிகையையொட்டி மூன்று நாள்களுக்குப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்திருந்தனர் தலிபான்கள். இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராதவிதமாக திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க துணைப்படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நேற்று நடந்த தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.