36 மணி நேரம், 2,500 ஆசனங்கள்; கின்னஸ் சாதனைக்காக 121 பெண்கள் யோகா

கின்னஸ் சாதனைக்காகப் புதுச்சேரியில் 121 பெண்கள் தொடர் யோகா நிகழ்த்திக்கொண்டிருக்கின்றனர்.

பெண்கள்

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி காஞ்சிபுரத்தைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும் மஹாயோகம் என்ற அமைப்பு, புதுச்சேரி இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் 36 மணி நேரம் தொடர் யோகாவை நிகழ்த்தி கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. நேற்று காலை தொடங்கிய இந்த நிகழ்வில் 121 பெண்கள் கலந்துகொண்டு இரண்டாவது நாளாக இன்று தொடர் யோகாவை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றனர். உணவு இடைவெளி இன்றி நடந்துகொண்டிருக்கும் இந்த சாதனை முயற்சி இன்று மாலை 7 மணிக்கு நிறைவு பெறுகிறது.

18 வயது முதல் 72 வயது வரை உள்ள பெண்கள் கலந்துகொண்டு சுமார் 3000-க்கும் மேற்பட்ட யோகாசனங்களைச் செய்து வருகின்றனர். கின்னஸ் சாதனைக்காக நடக்கும் இந்தத் தொடர் நிகழ்ச்சியை ஏராளமான பள்ளி மாணவர்களும், மாணவிகளும் கண்டு ரசித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு யோகா குறித்த செயல்விளக்கப் பயிற்சியும் அங்கே அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்க நிகழ்ச்சியில் 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி 8 நிமிடத்தில் 130 ஆசனங்களைச் செய்து அசத்தியது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பெண்களின் நலன் குறித்த முக்கியத்துவத்தை விளக்கவே இந்தச் சாதனை நிகழ்த்தப்படுவதாக தெரிவிக்கின்றனர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!