ஐ.ஆர்.சி.டி.சியின் அசத்தல் வசதிகள் - அப்டேட்டான இணையதளம்

இந்திய ரயில்வே துறையால் செயல்படுத்தப்படும் ஐ.ஆர்.சி.டி.சி என்ற  இணையதளத்தில் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.ஆர்.சி.டி.சி

இந்தியா முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில்களின் நேரம் போன்றவற்றை அறிந்துகொள்ள இந்திய ரயில்வே துறை சார்பில் ஐ.ஆர்.சி.டி.சி என்ற இணையதளம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இணையத்தில் மேலும் பல வசதிகளைச் செய்து தரவேண்டும் என நீண்ட நாள்களாகப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அதை ஏற்றுக்கொண்டுள்ள ரயில்வே நிர்வாகம், இணையத்தில்  பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. 

ஐ.ஆர்.சி.டி.சி

அதன்படி முன்னர் இருந்ததைப் போலவே டிக்கெட் முன்பதிவு, வெய்டிங் லிஸ்ட், ஸ்லீப்பர் கன்ஃபர்மேஷன் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். மேலும், ஒரு தடத்தில் செல்லும் ரயிலில் உள்ள அனைத்து டிக்கெட்களும் தீர்ந்துவிட்டால் அதே தடத்தில் அதே நாளில் செல்லும் மற்ற ரயில்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளலாம். உணவுகளை ஆர்டர் செய்வது, கால்டாக்ஸி புக் செய்வது போன்றவற்றை இந்த இணையத்திலிருந்தே செய்துகொள்ளலாம். அந்த வசதியில் உணவுகளில் விலைகளும் காட்டப்படும். மேலும், விடுமுறை நாள்களில் விடப்படும் சிறப்பு ரயில்கள் மற்றும் அவற்றின் முன்பதிவு பற்றிய அறிவிப்புகளும் தெரிந்துகொள்ளலாம். 

முன்னதாக முதியவர்களுக்காக முன்பதிவு செய்யும்போது  அவர்களுக்குக் கீழ் படுக்கைகள் கிடைக்காமல் பெரும் அவதிப்படுகின்றனர். ஆனால், தற்போது, முதியவர்களுக்கு முன்பதிவு செய்யும்போது கீழ் இருக்கைகளின் எண்ணிக்கை நிலை ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!