சி.வி.குமார் படத்தில் ஆக்‌ஷன் வேடத்தில் களமிறங்கும் இயக்குநர்!

தமிழில் சென்னையின் வடபகுதியில் நிகழும் நிழலுலக விஷயங்களைப்பற்றி  நிறைய படங்கள் வந்துள்ளன. அந்தவகையில் 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்'  என்ற திரைப்படம் தயாராகவுள்ளது. 'மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமான தயாரிப்பாளர் சி.வி.குமார். தொடர்ந்து மீண்டும் இயக்குநராக 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்ற படத்தைத் தொடங்கியிருக்கிறார்.

சி.வி.குமார்

பெண் கேங்ஸ்டர் பற்றிய கதையைக் கொண்ட இப்படத்தின் ஹீரோயினுக்கான தேடுதல் நடந்துவருகிறது, டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், அம்ஜத் கான் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் முக்கியமான ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்திக் குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ராத் கரிஷ் படத்தொகுப்பு செய்ய, ஹரி டஃபுசியா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்டப் பணியாக பாடல் பதிவு ஆரம்பமாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!