'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி | kamalhassan meet sonia gandhi in delhi

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (21/06/2018)

கடைசி தொடர்பு:13:00 (21/06/2018)

'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி

டெல்லியில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தன் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நேற்று டெல்லி சென்றிருந்தார். அங்கு தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னர் நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தமிழக அரசியல் பற்றி மட்டுமே பேசியதாகவும் கூட்டணி குறித்து எதுவும் விவாதிக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், ``இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அரசியல் குறித்து வேறு எதுவும் பேசவில்லை. நேற்று ராகுல் காந்தியைச் சந்தித்தேன். அதேபோன்றுதான் இன்று சோனியாவையும் சந்தித்துப் பேசினேன். அரவிந்த்  கெஜ்ரிவாலை சந்திப்பது குறித்து தற்போது ஆலோசிக்கவில்லை. அவருடன் நான் தொலைபேசியில் உரையாடினேன். காவிரி  மேலாண்மை ஆணையத்துக்கு பிரநிதிகள் அமைக்கப்படாதது குறித்து நிச்சயம் குமாரசாமியிடம் பேசுவேன்” எனக் கூறினார்.