வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (21/06/2018)

கடைசி தொடர்பு:13:30 (21/06/2018)

'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்

கார்ப்ரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 35 சதவிகிதம் பேர், உடல் நலனை மேம்படுத்த யோகா மேற்கொள்வது அசொசெம்  நடத்திய சர்வேயி்ல் தெரியவந்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 35 சதவிகிதம் பேர், உடல் நலனை மேம்படுத்த யோகா மேற்கொள்வதாக அசோசெம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

இந்தியத் தொழிலக கூட்டமைப்பான அசோசெம், நாடு முழுவதும் உள்ள 100 பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் 25 முதல் 35 வயதுடைய 1000 ஆண், பெண் ஊழியர்களிடம், உடல் நலனைச் சிறந்த முறையில் பேணிக்காக்க என்ன செய்கிறார்கள் என்பது குறித்து ஜூன் 1 முதல் 15-ம் தேதி வரையில்  ஆய்வு நடத்தியது. இதில், 35 சதவிகிதம் பேர்  உடல் நலனைப் பேண யோகா செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் 600 பேர், தங்கள் உடல் நலனைக் கட்டுப்கோப்புடன் வைத்திருக்க உடற்பயிற்சிகளை செய்வதாக தெரிவித்தனர். இதில் 30 சதவிதம் பேர் (350 ஊழியர்கள்) யோகா பயிற்சி மேற்கொள்வதாக கூறியுள்ளனர்.

யோகா பயிற்சி

மேலும், உடற்பயிற்சிக்காக 20 சதவிகிதம் பேர் ஜூம்பா உள்ளிட்ட நடனப்பயிற்சியும், 10 சதவிகிதம் பிசியோதெரபியும், 5 சதவிகிதத்தினர் கிக் பாக்சிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆண்கள் ஜிம்முக்கும், பெண்கள் நடனப்பயிற்சிக்கும் செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர்.

ஒரு அமைதியான வாழ்க்கை வாழ வழி வகுக்கிறது. தினமும் யோகா பயிற்சி செய்வதால், உடலுக்கு அதிக பலம் கிடைக்கிறது. மேலும், வாழ்க்கை சிக்கல்களை எதிர்கொள்ள மன வலிமையை அளிக்கிறது. யோகா செய்வதால் உடல் நலன் நன்றாக இருக்கிறது. நேர்மறையான விஷயங்களே மனதில் தோன்றுகிறது; வாழ்க்கை முறையை மாற்றுகிறது. மேலும், உணவுப் பழக்க வழக்கங்களில் ஒரு நெறிமுறையை கடைப்பிடிக்கவும் உதவுகிறது. ஜிம் மற்றும் நடனப்பயிற்சி போன்ற உடல்பயிற்சிகளைவிட யோகா சிறந்த, உடற்பயிற்சியாக இருப்பதாக பெரும்பாலான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.