`ஆட்டோவை எடுங்கள்’ - கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவரை துப்பாக்கியால் சுட்ட பெண்

தெருவில் வண்டியை நிறுத்தும் தகராறில், ஆட்டோ டிரைவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார் ஹரியானா பெண் ஒருவர்.

பெண்

ஹரியானா மாநிலம் குருக்ரம் பகுதியில் உள்ள பெண், தாம் எப்போதும் கார் நிறுத்தும் இடத்தில், தனது பக்கத்து வீட்டுக்காரரின் ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்ததால் அதை எடுக்கும்படி கூறியுள்ளார். பிறகு, அந்தப் பெண்ணுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் தொடங்கிய வாக்குவாதம் தகராறில் முடிந்தது. ஆத்திரமடைந்த அந்தப் பெண், கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ டிரைவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், அந்தப் பெண் சப்னா என்பதும், ஆட்டோ டிரைவர் பெயர் சுனில் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசிய காவல்துறையினர், ‘சப்னாவுக்கும் சுனிலுக்கும் இடையே பார்கிங் பிரச்னை தொடர்பாகத் தகராறு எழுந்துள்ளது. நீண்ட நேரமாக இருவருக்கும் வார்த்தைச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சப்னா தனது வீட்டுக்குச் சென்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைக் கொண்டுவந்து சுனிலை நோக்கி தலையில் சுட்டுள்ளார். ஆனால், சுனில் நகர்ந்துகொண்டதால் தோட்டா அவரின் காதை மட்டும் உரசிச் சென்றுள்ளது. இது தொடர்பாகச் சப்னா மற்றும் அவரின் கணவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், லேசான காயங்களுடன் சுனில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. சப்னா, சுனில் இருவருக்குமான தகராறை அப்பகுதியில் உள்ள சிலர் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!