வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (21/06/2018)

கடைசி தொடர்பு:17:29 (21/06/2018)

ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி, ஆடிட்டர் குருமூர்த்திக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி, ஆடிட்டர் குருமூர்த்திக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

சம்மன்


கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கூறிவந்தனர். இதற்குத் தீர்வு காணும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிப்பு:

விசாரணை ஆணையத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 4 மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விசாரணை ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்திவருகிறது. அந்த வரிசையில் தற்போது, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.