வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (21/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (21/06/2018)

 நடுரோட்டில் எரிக்கப்பட்ட பைக்... சிக்கிய ஆட்டோ டிரைவர் 

 பைக்

சென்னையில்,  உறவினர்களுக்கு இடையே  நடந்த மோதலில், நடுரோட்டில் பைக் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீஸார் கைதுசெய்தனர். 

சென்னை பெரம்பூர், டி.டி.தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், பிளம்பர். இவரின் தங்கை சங்கீதா. இவரின் கணவர் கிஷோர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. சில மாதங்களுக்கு முன், சங்கீதாவை மண்ணெண்ணெய் ஊற்றி கிஷோர் கொலைசெய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பாக திரு.வி.க.நகர் போலீஸில் சங்கீதா புகார் கொடுத்தார். அதன்பேரில், கிஷோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சில நாள்களுக்கு முன், சிறையிலிருந்து வெளியில் வந்த கிஷோர், சங்கீதாவிடம் தகராறுசெய்தார். அப்போது, 'உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்' என்று மிரட்டியுள்ளார். 

 இந்த நிலையில், விக்னேஷ் குமாரின் பைக், நடுரோட்டில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக் கிடந்தது. இதுகுறித்து திரு.வி.க.நகர் போலீஸில் விக்னேஷ் குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில், உதவி கமிஷனர் அரிக்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் விசாரணை நடத்தினார். விசாரணையில் விக்னேஷ் குமாரின் பைக்கை எரித்தது கிஷோர் என்று தெரிந்தது. இவர், ஆட்டோ டிரைவர்.  இவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.