டார்ஜிலிங்கில் ரஜினியை ஆச்சர்யப்படுத்திய ரிசார்ட் உரிமையாளர்!

டார்ஜிலிங்கில் ரஜினி தங்கியிருந்த ரிசார்ட் `ரஜினி வில்லா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 

ரஜினி வில்லா

Photo Credit: Twitter/@rajumahalingam

காலா படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து உற்சாகத்தில் உள்ளது அப்படக்குழு. காலா படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் `ஜிகர்தண்டா' , `இறைவி' படங்களின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கபாலி, காலா படங்களை தொடர்ந்து ரஜினி மூன்றாவது முறையாக இளம் கூட்டணியுடன் களமிறங்கும் படம் இது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாள்களாக மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் நடைபெற்றது. இதில், சண்டைக்காட்சிகள் உள்ளிட்டவை படமாக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, டார்ஜிலிங் ஷூட்டிங்கின் போது, அங்குள்ள அலிட்டா ஹோட்டல் & ரிசார்ட்ஸில் 10 நாள்கள் ரஜினி தங்கியிருந்தார். இதற்காக அவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டது. 

ரஜினி தங்கியதை தொடர்ந்து அந்த ரிசார்ட்டின் பெயர் `ரஜினிவில்லா #3' என மாற்றப்பட்டுள்ளது. மேலும் `ரஜினிவில்லா #3' என்ற பெயர் பலகையுடன் ஹோட்டல் உரிமையாளர் ரஜினியுடன் எடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய ஹோட்டல் உரிமையாளர்,  ``ஒரு சிறந்த மனிதர் எங்கள் ஹோட்டலில் தங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் அன்பைக் காண்பிக்கவே ஹோட்டல் பெயரை மாற்றம் செய்தோம்" எனத் தெரிவித்தார். இதேபோல், டார்ஜிலிங்கில் தங்கியிருக்கும் போது ரஜினி டீ குடித்த கடைக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாய் டீ பார் லவுஞ்சுக்கு பதிலாகத்  `தலைவா ஸ்பெஷல்' என மாற்றப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!