வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (21/06/2018)

கடைசி தொடர்பு:20:20 (21/06/2018)

`18 பேர்களுக்குள் கருத்து வேறுபாடா?’ - டி.டி.வி.தினகரன் பதில்

மத்திய அரசின் கருணையால்தான் தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது,

``மத்திய அரசின் கருணையால்தான் தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது'' என்று கிண்டலடித்துப் பேசினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.

டிடிவிதினகரன்

விருதுநகர் மாவட்டம், சாத்தூருக்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் ஒற்றுமையுடன் உள்ளார்கள். யாருக்கும் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் நிலைப்பாட்டில்தான் நானும் இருக்கிறேன். அவர்கள் எடுக்கும் முடிவுதான் எனது முடிவு. எந்தக் குழப்பமும் இல்லை. 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தால் அதே வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். தீர்ப்பு வேறு மாதிரி வந்திருந்தால் இந்த ஆட்சியே இல்லாமல் போயிருக்கும். மத்திய அரசின் கருணையில்தான் தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை அமைப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். போராட்டம் செய்பவர்களை சமூக விரோதிகளாகப் பார்க்கிறது இந்த அரசு. மக்கள் எதிர்க்கும் எந்தத் திட்டமும் தேவையில்லை. எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை முதல்வர் நேரில் சந்தித்து, சாலை திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்க வேண்டும்'' என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க