போலீஸாரை விமர்சித்த விவகாரம் - சீரியல் நடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல் உடையில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை நிலானிக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸ் சீருடையில் விமர்சனம்செய்து வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

நிலானி


ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாளில் கலவரம் வெடித்தது. பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை விமர்சித்து சீரியல் நடிகை நிலானி, காவலர் சீருடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில், காவல் சீருடை அணியவே வெட்கமாக உள்ளது என விமர்சித்துப் பேசினார். இதையடுத்து, அவர்மீது  வடபழனி காவல்துறையினர், வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, குன்னூரில் சீரியல் நடிகை நிலானியை காவல்துறையினர் நேற்று கைதுசெய்தனர். அவர், உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டதாகத் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட அவரை, வடபழனி காவல்துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அங்காள ஈஸ்வரி, சீரியல் நடிகை நிலானியை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!