வெளியிடப்பட்ட நேரம்: 19:16 (21/06/2018)

கடைசி தொடர்பு:19:19 (21/06/2018)

``நான் ஸ்டீரியோ டைப் கேர்ள் அல்ல!’’ - நெய்மரைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் கூறும் நீலகிரி சிறுமி

நீலகிரியைச் சேர்ந்த சிறுமி நைதன்யாவுக்கு உலகக் கோப்பையில் கலந்துகொள்ளும் வாய்ப்பு

``நான் ஸ்டீரியோ டைப் கேர்ள் அல்ல!’’ - நெய்மரைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் கூறும் நீலகிரி சிறுமி

ஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆட்டம் தொடங்கும் முன்னரும் களத்தில் பயன்படுத்தப்படும் பந்தை சிறுவனோ சிறுமியோ கையில் எடுத்து வந்து நடுவரிடம் வழங்குவார்கள்.  இந்தியாவில் நீலரிகியைச் சேர்ந்த நைதன்யா கே.ஜான் என்ற சிறுமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நாளை நடைபெறவுள்ள பிரேசில் - கோஸ்டாரிகா ஆட்டத்தின்போது, நைதன்யா பந்தை எடுத்துக்கொண்டு நடுவர்கள் மற்றும் வீரர்களுடன் களத்துக்கு வருகிறார். இதன் மூலம் ஃபிஃபா உலகக் கோப்பையில் ஆதிகாரபூர்வ பந்தை எடுத்து வந்த முதல் இந்தியச் சிறுமி என்ற பெருமையை நைதன்யாபெறுகிறார். இதற்காக நேற்று நைதன்யா ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். 

உலகக் கோப்பையில் பங்கேற்கும் நீலகிரி சிறுமி

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ரிஷி வேலி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவரும் நைதன்யா பள்ளி கால்பந்து அணியில் இடம் பிடித்துள்ளார். ஃபிஃபா-வின் ஸ்பான்ஷரான 'கியா' நிறுவனம் உலகம் முழுக்கவிருந்து சிறுவர் சிறுமிகளைத் தேர்வு செய்தது. கால்பந்து திறமை படைத்த 50 சிறுவர் சிறுமிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்றனர். நைதன்யாவின் கால்பந்து திறமையைக் கண்டு வியந்த இந்திய கேப்டன் சுனில் ஷேத்ரி அவரைத் தேர்வு செய்தார். கர்நாடகத்தைச் சேர்ந்த ரிஷ் தேஜ் என்ற சிறுவனும் ரஷ்யா உலகக் கோப்பை போட்டியில் அதிகாரபூர்வ பந்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

இது குறித்து நைதன்யா, ``எனக்கு பார்சிலோனாவும் மெஸ்ஸியும்தான் பிடிக்கும். நெய்மர் பார்சிலோனாசிலிருந்து வெளியேறியதும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தற்போது, அவரையே நான் சந்திக்கப்போகிறேன். நெய்மர், ஹட்டின்ஹோ, மார்ஸிலோ, ஹீலர் நவாஸ் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். செயின்ட். பீட்டர்ஸ்பர்க்கில் அர்ஜென்டினா கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. அப்போது, மெஸ்ஸி வந்தால் அவருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்வேன். பொதுவாக, பெண்கள் கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஸ்டீரியோ டைப் பெண்ணாக இருக்க நான் விரும்பவில்லை'' என்கிறார். 

2002-ம் ஆண்டு ஜப்பான் உலகக் கோப்பையில் தமிழகத்தைச் சேர்ந்த சங்கர் துணை நடுவராகப் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க