`நீதித்துறையை விமர்சிப்பது தற்கொலைக்குச் சமம்' - நீதிபதி கிருபாகரன் வேதனை!

நீதித்துறையில் இருப்பவர்களே நீதிபதிகளை விமர்சிப்பதைத் தடுக்காவிட்டால், தற்கொலைக்கு வழிவகுக்கும் என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம்

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில், மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதியை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் விமர்சித்து தொலைக்காட்சிகளில் பேட்டியளித்தார். இதனால், அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அமர்வில் முறையிட்டார். அதில்,  ``தங்க தமிழ்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். நீதித்துறை மீதும், நீதிபதி மீதும் விமர்சனம் வைப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் குழு அமைக்க வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்தார். 

அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன்,  ``தொலைக்காட்சி விவாதங்களில் நீதித்துறையைச் சார்ந்தவர்களே, தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் விமர்சிப்பதைத் தடுக்காவிட்டால், நீதித்துறையின் தற்கொலைக்கு அது வழிவகுத்துவிடும்" என வேதனை தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தைத் தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாகவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!