ஆஸ்திரேலியா - டென்மார்க் இடையேயான கால்பந்து போட்டி ட்ரா! | fifa world cup 2018 denmark vs australia match draw

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (21/06/2018)

கடைசி தொடர்பு:20:50 (21/06/2018)

ஆஸ்திரேலியா - டென்மார்க் இடையேயான கால்பந்து போட்டி ட்ரா!

ரஷ்யாவில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - டென்மார்க் இடையேயான கால்பந்து போட்டி, ட்ராவில் முடிவடைந்தது.

ரஷ்யாவில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - டென்மார்க் இடையேயான கால்பந்து போட்டி  ட்ராவில் முடிவடைந்தது.

கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் சி பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், ஆஸ்திரேலியா - டென்மார்க் அணிகள் மோதின. ஆஸ்திரேலியா, டென்மார்க்குடன் கடுமையாகப் போராடியது. ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில், டென்மார்க்கைச்சேர்ந்த எரிக்சன் கோல் அடித்தார். இதனால், டென்மார்க் 1-0 என்ற கோல் கணக்கில்  முன்னிலை வகித்தது. இதையடுத்து நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில், பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாய வீரர் ஜெடினாக் கோல் அடித்தார். 

இதனால், டென்மார்க் உடன் ஆஸ்திரேலியா ஈடுகொடுக்கும் சூழல் உருவானது. இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் தொடர்ந்து ஆடின. கடுமையான போட்டி நிலவிவந்த நிலையில், இரு அணிகளுமே கோல் அடிக்காததால் ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தது. அடுத்து நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ், பெரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி, அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறும்.


[X] Close

[X] Close