கடற்படைத் தளத்தில் நடந்த யோகா பயிற்சி: பெண்கள், குழந்தைகள் பங்கேற்பு | yoga training has been cinducted in INS kattabomman naval camp

வெளியிடப்பட்ட நேரம்: 01:48 (22/06/2018)

கடைசி தொடர்பு:01:48 (22/06/2018)

கடற்படைத் தளத்தில் நடந்த யோகா பயிற்சி: பெண்கள், குழந்தைகள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் கடற்படைத் தளத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா பயிற்சிபெற்றனர்

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் கடற்படைத் தளத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில்... குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா பயிற்சி பெற்றனர்

யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் உள்ள ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படைத் தளத்தில், யோகாகுறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கடற்படை மையத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் நடந்த இந்தப் பயிற்சிமுகாமை ஈஷா ஃபவுண்டேஷன் அமைப்பின் சிறந்த பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு, பங்கேற்ற அனைவருக்கும் யோகாசனம்குறித்து பயிற்சியளித்தனர். 

முன்னதாக, பங்கேற்ற அனைவருக்கும் யோகா ஃபவுண்டேஷன் பயிற்சியாளர்கள் யோகாவின் பாரம்பரியம் குறித்தும் அதன் அவசியம் பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். அதைத் தொடர்ந்து, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் யோகாசனப் பயிற்சி மேற்கொண்டனர். யோகாசனங்களின் பயன்பாடு, அதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் பயன்கள் பற்றியும் தியானத்தின் அவசியம்குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

இதேபோல, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உள் விளையாட்டு அரங்கில் நடந்த யோகா பயிற்சியை, பல்கலைக் கழகத்தின் பதிவாளர் சந்தோஷ்பாபு தொடங்கிவைத்தார். மாணவ மாணவியர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், யோகாசனத்தின் வரலாறு, பயன்பாடுகுறித்து உலக சமுதாய சேவா சங்கத்தின் நெல்லை மண்டலத் தலைவரான அண்ணாமலையார் விளக்கிக் கூறினார். இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.