`அருவியைப் பார்க்கலாம்; குளிக்கக்கூடாது!'- மணிமுத்தாறில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையின் வேகம் குறைந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை

மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையின் வேகம் குறைந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை

மணிமுத்தாறு அணை

தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்ததால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று வெள்ளம் குறைந்ததால் மெயின் அருவியில் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழலைப் பயணிகள் அனுபவித்து மகிழ்கிறார்கள்.

இந்த நிலையில், மணிமுத்தாறு அருவிப் பகுதியில் பெய்த மழையால் கடந்த 14 நாள்களாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று வெள்ளம் குறைந்துவிட்டது. இதுவரையிலும் வனத்துறை சோதனைச் சாவடியைக் கடக்கவே பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

அதனால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடிகிறது. ஆனால், அருவிக்குச் செல்லும் பாதை மோசமான நிலையில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தால் தடாகத்துக்குள் தவறி விழுந்துவிழும் ஆபத்து இருக்கிறது. அதன் காரணமாக பயணிகளைக் குளிப்பதற்கு வனத்துறை அனுமதிக்கவில்லை. அருவியின் அருகில் சென்று பார்வையிட்ட போதிலும், அருவியில் குளிக்க முடியாத நிலை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!