பினராயி விஜயனை சந்திக்க பிரதமர் மோடி 4-வது முறையாக மறுப்பு

பினராயி விஜயனை சந்திக்க பிரதமர் மோடி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

பினராயி விஜயனை சந்திக்க பிரதமர் மோடி 4-வது முறையாக மறுப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயனைச் சந்திக்க மோடி மறுப்பு

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பிரதமர் மோடியை சந்திக்க கேரள முதல்வர் அப்பாயின்ட்மென்ட் கேட்டு வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் பங்கேற்க பினராயி விஜயன் டெல்லி செல்கிறார். ரேஷன் பொருள்களில் மாநிலத்துக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் வேறுபாடு காட்டப்படுவது தொடர்பாக பிரதமரை சந்திக்க பினராயி விஜயன் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பினராயி விஜயனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பினராயி விஜயனை சந்திக்க பிரதமர் மறுப்பது இது நான்காவது முறை ஆகும்.

சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் 9 நாள்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தச் சமயத்தில் பிரதமர் மோடியின் எதிர்ப்பு முதல்வர்களாக கருதப்படும் சந்திரபாபு நாயுடு, மம்தா பனார்ஜி, குமாரசாமி, பினராயி விஜயன் ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். பின்னர், நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து ஆந்திர பவனில் 4 முதல்வர்களும் தனியாக ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்துதான் பினராயி விஜயனை சந்திக்க பிரதமர் மீண்டும் மறுத்தாகச் சொல்லப்படுகிறது. 

ரேஷன் பொருள்கள் விநியோகம் தொடர்பாக உணவுப் பொருள்கள் விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்குமாறு பினராயி விஜயனிடம் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடைசியாக 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பினராயி விஜயனும் மோடியும் சந்தித்துக்கொண்டனர். அப்போது, கேரளத்தில் இடது மற்றும் வலதுசாரி அமைப்புகளுக்கிடையே நிலவும் மோதல்கள் குறித்தும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொலையாவது குறித்து இருவரும் விவாதித்ததாகச் சொல்லப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!