தி.மு.க கைதுக்கு அஞ்சாது..! மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தமிழக ஆளுநர் ஆய்வு செய்வதற்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டிய தி.மு.கவினர் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலின்

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். அவரது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று தி.மு.கவினர் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், 'மாநில உரிமைகளைப் பறிக்கும் விதத்தில், நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு நடத்த வந்த மாண்புமிகு ஆளுநருக்கு ஜனநாயக ரீதியாக கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைக் கைது செய்து ரிமாண்ட் செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டினால் கைது செய்” என்றெல்லாம் மத்தியிலிருந்து மறைமுக உத்தரவுகளைப் பிறப்பித்து அதனை மாநில அரசு செயல்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்தும் தி.மு.க இதுபோன்ற கைதுகளுக்கு அஞ்சிப் போராட்டத்தை எக்காரணத்தை கொண்டும் கைவிடாது' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!