`நீங்கள் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது'!- அருண் ஜெட்லிக்குப் ப.சிதம்பரம் பதிலடி

ராகுல் காந்தியின் அனுதாபத்தை மாவோயிஸ்ட் மற்றும் ஜிகாத் அமைப்பினர் பெற்றுள்ளனர் எனக் கூறுவது நகைச்சுவையாக உள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிமைச்சர் அருண் ஜெட்லி, `மாவோயிஸ்ட், ஜிகாத் அமைப்புகள் மனித உரிமைக்கு எதிராகச் செயல்படுகின்றன. ஆனால், ராகுல் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இந்தக் குழுக்களை வரலாற்று ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் காங்கிரஸ் எதிர்ப்பதாக இருந்தாலும், அவர்கள் ராகுல் காந்தியின் மனதில் பரிவு உணர்வு பெற்றுள்ளனர்' என்று கூறினார். 

இதற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ப.சிதம்பரம், `ராகுல் காந்தியின் அனுதாபத்தை மாவோயிஸ்ட் மற்றும் ஜிகாத் அமைப்பினர் பெற்றுள்ளனர் என்று கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளையும் காங்கிரஸ் முற்றிலுமாகவும் கடுமையாகவும் எதிர்த்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் மாவோயிஸ்ட்கள் வன்முறையால், எங்களின் தலைமையை இழந்தோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஜம்மு-காஷ்மீரில் ஜிகாத் அமைப்பினர்களுடன் போராடி வன்முறை அளவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது காங்கிரஸ்' எனப் பதிவிட்டு அருண் ஜெட்லிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!