சவுதியில் பணியாற்ற டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம்!- நாகை கலெக்டர் அறிவிப்பு

Doctors wanted

சவுதி அரேபியாவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் தேவை என்றும் தகுதியும், விருப்பமும் உள்ள டாக்டர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை அனுப்புமாறு நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

நாகை மாவட்ட ஆட்சியர்

இதைப்பற்றி நாகை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தீவிர சிகிச்சைப் பிரிவு, மயக்க மருந்துப் பிரிவு, அறுவைச் சிகிச்சை நியோநாக்டேல் சிகிச்சைப் பிரிவு, இன்டேர்னல் மெடிசன், ஃபேமிலி மெடிசன் போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் அனுபவம் மிக்க அலோபதி டாக்டர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜூலை 9ம் தேதி முதல் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டு பணி அனுபவம், 55 வயதிற்குட்பட்ட டாக்டர்கள் சிறப்பு டாக்டர்களாக விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு டாக்டர்களின் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

வளர்ந்த நாடுகளில் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு மாத ஊதியம் ரூ.3.07 லட்சம் முதல் ரூ.5.09 லட்சம் வரை வழங்கப்படும். வளர்கிற நாடுகளில் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1.84 லட்சம் முதல் ரூ.3.03 லட்சம் வரை வழங்கப்படும். மேலும், உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா இவையாவும் சவுதி அரேபியா அரசின் சட்டத்திற்குட்பட்டு இதரச் சலுகைகளும் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ள டாக்டர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!