நக்சல் அமைப்பிலிருந்து வெளியேறிய 100 பேர்! பட்டப்படிப்புக்காக நுழைவுத்தேர்வு எழுதினர்

நக்சலைட் அமைப்பில் இருந்து வெளியேறிய நூறு இளைஞர்கள், பட்டப்படிப்பில் சேர இக்னோ பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை இன்று எழுதினர். 

நக்சலைட்

Photo Credit: ANI

இந்தியாவில் நக்சலைட் பிரிவினைவாதிகள் ஏற்படுத்தும் தாக்குதல், நாட்டின் அமைதியை சீர்குலைப்பதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு சவால் விடும் அளவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு 90-க்கும் மேற்பட்ட நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒடிசா காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். அவர்களுக்கு, மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் போலீஸார். 

மாணவர்

Photo Credit: ANI

அதன் முயற்சியாக, இன்று ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து நக்சலைட் அமைப்பில் இருந்து வெளியேறிய மாணவர் ஒருவர் கூறுகையில், `நக்சல் அமைப்பில் இருந்து வெளியேறிய நாங்களும் சமுதாயத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இக்னோ பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில், இக்னோவில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற வாய்ப்பு உள்ளது' எனக் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!