`இறந்ததாக அறிவிக்கப்பட்ட முதியவரின் உடலில் வியர்வை' - மருத்துவமனைக்கு எதிராகக் கொந்தளித்த உறவினர்கள்! | Man declared dead by doctors found to be sweating - relations got angry

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (24/06/2018)

கடைசி தொடர்பு:01:00 (24/06/2018)

`இறந்ததாக அறிவிக்கப்பட்ட முதியவரின் உடலில் வியர்வை' - மருத்துவமனைக்கு எதிராகக் கொந்தளித்த உறவினர்கள்!

டெல்லியில் முதியவர் இறந்துவிட்டதாக கூறிய பின் உயிருடன் இருப்பது தெரியவந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முதியவர்

Photo Credit: ANI


ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர்  சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி சென்ற போது அவருக்கு வியர்த்தை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் வியர்வை எப்படி வரும் என்ற குழப்பத்தில், நோயாளியை மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது  அவர் உயிருடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரத்துவர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் என நோயாளியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இறந்துவிட்டதாக

Photo Credit: ANI

இந்த குற்றச்சாட்டை கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. நோயாளியை இறந்துவிட்டதாக நாங்கள் கூறவில்லை என்று விளக்கமளித்துள்ளது. மேலும் நோயாளியின் மருத்துவக்குறிப்பில் நோயாளியின் உடல்நிலை மோசமாக உள்ளது; அவருக்கு மேல்சிகிச்சை தேவை என குறிப்பிட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.