வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (24/06/2018)

கடைசி தொடர்பு:06:30 (24/06/2018)

குளத்தில் இறங்கி தூர்வாரிய எம்.எல்.ஏ..! கிராம மக்கள் மகிழ்ச்சி

ஆகாயத்தாமரையால் மூடப்பட்டிருந்ததால் குளத்து நீரை கால் நடைக்களோ, கிராம மக்களோ பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இது குறித்து பேர்பெரியான்குப்பம் கிராம மக்கள் நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா. ராஜேந்திரனிடம் தெரிவித்தனர். இதனையடுத்து எம்எல்ஏ சபா. ராஜேந்திரன் குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை தூர் வார முடிவு செய்தார்.

நெய்வேலி

நெய்வேலி அருகே உள்ள பேர்பெரியாங்குப்பம் கிராமத்தில் ஏமராசன் கோயில் குளம் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டது. இதனால் அந்தக் குளத்தில் அதிக அளவில் மழை நீர் தேங்கி உள்ளது. ஆனால் தேங்கியிருந்த மழை நீரில் ஆகாயத்தாமரையால் மூடப்பட்டிருந்ததால் குளத்து நீரை கால் நடைக்களோ, கிராம மக்களோ பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.ஞானமணி

இது குறித்து பேர்பெரியான்குப்பம் கிராம மக்கள் நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரனிடம் தெரிவித்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை தூர் வார முடிவு செய்தார். இந்நிலையில் இன்று எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் குளத்தில் இறங்கி தூர் வாரும் பணியில் ஈடுப்பட்டார்.

தூர் வாரப்பட்ட ஆகாய தாமரைகள் டிராக்டர் மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் இருந்த வனப்பகுதியில் கொட்டப்பட்டது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ குளத்தில் இறங்கி ஆகாயத் தாமரைகளை தூர்வாரிய சம்பவம் கிராம மக்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேர்பெரியான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஞானமணி கூறியதாவது, 'எங்கள் ஊரில் ஏமராசன் குளம் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டது. இதனால் குளத்தின் ஆழமானப் பகுதியில் அதிக அளவில் மழை நீர் தேங்கி நின்றுள்ளது. ஆனால் இந்த தண்ணீர் முழுவதும் ஆகாயத் தாமரையால் மூடப்பட்டதால் கிராம மக்கள், கால் நடைகள் பயன்படுத்த முடியவில்லை. இது குறித்து நாங்கள் தொகுதி எம்.எல்.ஏவிடம் மனுக் கொடுத்தோம். இன்று அவரின் முயற்சியால் எங்கள் ஊர் குளம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது' என்றார் மகிழ்சியுடன்.