வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (24/06/2018)

கடைசி தொடர்பு:18:20 (24/06/2018)

`ஐந்தாண்டுகளில் 29,370 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை!’ - அமைச்சர் பெருமிதம்

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற 55 பயனாளிகளுக்கு ரூ. பயனாளிகளுக்கு ரூ.87.60 லட்சம் மதிப்பில் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.18,00,000 மதிப்பிலும், விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ.34,80,000 மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.10,80,000 மதிப்பிலும்,கணவனால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.24,00,000 மதிப்பிலும் என மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ.87.60 லட்சம் மதிப்பில் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசுகையில்,``அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டுமென அரும்பாடுபட்டவர் ஜெயலலிதா.அரசின் உதவிகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர், குடும்பத்தில் பெண்களின் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை உயரும் என்பதை கருத்தில் கொண்டு திருமண நிதியுதவி, அரை பவுன் தாலிக்கு தங்கம் வழங்கியதை உயர்த்தி, 1 பவுன் வழங்கும் திட்டம், மடிக்கணினி உட்பட 14 வகையான உபகரணங்கள் வழங்குதல் என எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நிலை உயர வழங்கினார். கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித்தொகை ரூ.500-ஆக இருந்ததை ரூ.1000-ஆக உயர்த்தி வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த ஐந்தாண்டுகளில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 29,315 பயனாளிகள் மாதாந்திர உதவித் தொகை பெற்று வருகின்றனர். இன்று 55 பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்படுகிறது. இத்துடன் மொத்தம் 29,370 பயனாளிகள் உதவித்தொகை பெறும் திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர்" என்றார்.