`காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் அழுதாலும் பயனில்லை!' - அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அழுது, புலம்பினாலும் ஒரு பயனும் ஏற்படபோவதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்

கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சேலம் டூ சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் விவசாயிகளிடம் கருத்துக்கேட்கப்படும். இதனால் சுற்றுச்சூழலுக்கும், விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். மேலும் விவசாயிகளுக்கான நிவாரணம் முறையாக வழங்கப்படும் என தெரிவித்தார். ஆளுநர் ஆய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், செய்தியாளர்கள் எப்படி செய்தி சேகரிக்கச் செல்கிறார்களோ அதேபோலத்தான் ஆளுநர் தூய்மை பணிக்குச் செல்கிறார் என கூறினார். ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சியினர், மக்கள் மத்தியில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளப் போராட்டங்களை நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். காவிரி விவாகரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அழுது புலம்பினாலும், ஒரு பயனும் ஏற்படபோவதில்லை என்றும் சட்டரீதியாக ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதால் அரசியல் ரீதியாக பேசி வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கமல், சோனியா காந்தியை சந்தித்தது கூட்டணிக்காகக் கூட இருக்காலம் எனவும் அவர் கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!