வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (25/06/2018)

கடைசி தொடர்பு:08:52 (25/06/2018)

`பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது!’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சி.டி.மணி மற்றும் அவரது கூட்டாளிகளை சென்னை போலீஸார் கைது செய்தனர்.

ரௌடி சி.டி. மணி

சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கே.கே.நகர், மாம்பலம், கோட்டூர் புரம், அடையாறு, பாண்டிபஜார், பள்ளிக்கரணை ஆகிய காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சி.டி.மணியை காவல்துறையினர் தேடிவந்தனர். சி.டி.மணி மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சி.டி.மணி மற்றும் அவனது கூட்டாளிகள் சென்னையைச் சுற்றிவருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் கூடுதல் துணை ஆணையாளர் குமார், தலைமையிலான குழுவினர் சி.டி.மணி மற்றும் அவனது கூட்டாளிகளை முட்டுக்காடு அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள், தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கி

 

 

மேலும், இதுதொடர்பாக கானத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சி.டி.மணி மீது 28 கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.