டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம்!

ரஷ்யாவில் தற்போது கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னரே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கால்பந்து ஜுரம் பரவிவிட்டது. கால்பந்து தொடர்பான பல்வேறு சுவாரஸ்யத் தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. 

கால்பந்து ரசிகர்

இங்கிலாந்து அணியின் தீவிர ரசிகரான டக்ளஸ் மோரிடன், பிரிஸ்டோல் நகரில் வசித்து வருகிறார். இவர் இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து பனாமா அணிகள் மோதும் போட்டியை நேரில் காண டிக்கெட் வாங்கியிருந்தார். அதன் பின்னர் போட்டியைக் காண ரஷ்யா வந்துவிட்டார். சுமார் 3000 கி.மீ பயணம் செய்து போட்டி நடக்கும் நகருக்கு வந்த பிறகுதான் அவருக்கு, தான் போட்டிக்கான டிக்கெட்டை எடுக்காமல் வந்துவிட்டோம் என்று தெரிந்தது. இதனால் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட அவர், தன்னுடன் தங்கியிருந்த நபரான டேன் ஹொவெல்ஸ் உதவியை நாடினார். 

பத்திரிகையாளரான டேனும் இதுதொடர்பாக ட்வீட் ஒன்றைப் பதிவு செய்தார். ’இவர் இந்தப் போட்டியைக் காண பிரிஸ்டோலிலிருந்து வந்துள்ளார். ஆனால், வாங்கிய டிக்கெட்டை தனது வீட்டிலே வைத்துவிட்டு வந்துவிட்டார்.  யாரிடமாவது கூடுதல் டிக்கெட் இருந்தால் தரும்படி கேட்டுக்கொள்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார் அவருக்கு டிக்கெட் கிடைத்தது. ஆனால், டக்ளஸ் மோரிடனுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக ட்வீட் செய்த டேன், ‘டிக்கெட் கிடைத்துவிட்டது. ஆனால், இப்போது அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவரைப் பார்த்தால் ஹோட்டல் வரவேற்பு அறையை அணுகச் சொல்லுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டார். ஆனாலும் கடைசிவரை அவர் அங்கு வரவில்லை. இதனால் போட்டியை அவரால் பார்க்கமுடியாமல் போய்விட்டது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து பனாமாவை 6-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!