தந்தையைக் கொடூரமாகக் கொன்ற மகன்! ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுக்காததால் நடந்த பயங்கரம்

ஸ்மார்ட்போன் வாங்க பணம்தர மறுத்த தந்தை, மண்வெட்டியால் அடித்துக் கொன்றுள்ளார் மகன். இந்த அதிர்ச்சி சம்பவம் கான்பூரில் நிகழ்ந்துள்ளது. 

ஸ்மார்ட்போன்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள குல்ககே கிராமத்தில் வசித்து வந்த கிருஷ்ணா குமாருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன்  கிஷோர் திவாரி, ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுக்காததால் தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். 

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், `கிஷோர் திவாரி, அவரின் தந்தையிடம் புதிதாகச் சந்தையில் அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க பணம் கேட்டு நச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பம்பு செட் ரூமில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது தந்தையைக் கடுமையாகத் திட்டித் தீர்த்துள்ளார் கிருஷ்ணா குமார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கிஷோர் திவாரி பம்பு செட் அறையில் வைக்கப்பட்டிருந்த மண்வெட்டியை எடுத்து, கிருஷ்ணா குமாரை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, கிஷோர் திவாரி மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!